TAMIL MORAL STORIES
STORIES FOR KIDS
TAMIL FUNNY, INTERESTING, BRAVE STORIES
ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர் ஒரு கூட்டுத்தாபனத்தில் மூவர் நேர்முகப் பரீட்சையில் சித்தி அடைந்தனர். அவர்களுக்கு ஆரம்ப வருடாந்த ஊழியமாக 100,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலதிபர் இரு கருத்துகளை முன்வைத்து ஒன்றை தெரிவு செய்யும்படி கூறினார். முதலாவது ஒவ்வொரு ஆண்டும் 1500 ரூபாய் அதிகரிப்பு, இரண்டாவது அரையாண்டுக்கு ஒரு முறை 500 ரூபாய் அதிகரிப்பு. முதலிருவரும் முதல் கருத்தை விரும்பி ஏற்றனர். சற்று யோசித்த மூன்றாமவன் இரண்டாம் தெரிவை ஏற்றான். மூன்றாம் …. Read More
உங்களால் முடியுமா? முட்டை வியாபாரி ஒருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளிடம் 90 முட்டைகளை மூத்தவளிடம் 10, இரண்டாம் மகளிடம் 30, கடைசி மகளிடம் 50வும் வழங்கி சந்தையில் விற்று வரும் படி கூறினார்.ஆனால் அவர் பிள்ளைகளுக்கு சில நிபந்தனைகளை விதித்தார். அனைவரும் ஒரே விலையில் முட்டைகளை விற்கவேண்டும். மூவரும் முட்டைகளை விற்று பெறும் மொத்த பணம் சமமாக இருக்க வேண்டும்.மூவரும் தந்தையின் நிபந்தனையை ஏற்று அதன் படி முட்டைகளை விற்று பணம் கொண்டு வந்தனர்……. எவ்வாறு? …. Read More
மழை! ஓயாத மழை! ஏரி நிறைந்து வழியும் அளவுக்கு மழை. அந்த ஏரி நீர் குளிர்ச்சி அடைந்து விட்டது. அந்தக் குளிரைத் தாங்க முடியாத ஒரு தவளை, மழை ஓய்ந்ததும் சற்று தூரத்திலுள்ள ஒரு கிணற்றுக்கு வந்தது. கிணற்று நீர் வெது வெதுப்பாக இருக்குமே என்பதால் கிணற்றிற்குள் குதித்தது.
தன் மகன்கள் நால்வரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தார் தந்தை. ஒற்றுமையாக இருங்கள் என்று அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்களோ அவர் பேச்சைக் கேட்கவில்லை. என்ன செய்வது என்று சிந்திதார் அவர். நல்ல வழி ஒன்று தோன்றியது. குச்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஒரே கட்டாக கட்டினார்.
ஓர் ஊரில் 10பேர் கொண்ட குழுவினர் வியாபாரத்திற்காக பயணம் செல்ல தயாராகினர். வியாபாரத்திற்கான பொருட்கள் ஓரிடத்தில் வைக்கப்பட்டன.ஒவ்வொருவரும் மிகக்குறைந்த எடையுள்ள சாமன்களை தேர்ந்தெடுத்தனர். அவர்களில் மெலிந்த ஒருவன் மட்டும் எடை கூடிய பொதியை தேர்ந்தெடுத்தான். மற்றவர்கள் அவனுக்கு பரிதாபப்பட்டு சிரிய பொதியினை எடுக்குமாறு உபதேசித்தனர். புத்திசாலியான அவன் பெரிய பொதியினை சுமந்தான். பயணமும் தொடர்ந்தது. நாட்கள் செல்ல செல்ல அவனது பொதியின் எடை குறைந்துகொண்டே சென்றது. இறுதியில் அவன் சுமையின்றியே சென்றான். மற்றவர்கள் இன்னும் அதே …. Read More
அபூநவாஸின் கடைசி நகைச்சுவை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீதின் அரசவையில் நகைச்சுவை புலவராயிருந்தவர் அபூநவாஸ். எல்லோரையும் சிரிக்க வைத்த அபூநவாசை பிணி சூழ்ந்து கொண்டது. மரணப்படுக்கையில் கிடந்தார். மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு விட்டார்கள். அப்போது அவரை நண்பர் ஒருவர் பார்க்க வந்தார். அபூ நவாஸின் நண்பரல்லவா, அவரிடமும் நகைச்சுவை இல்லாமலா போகும். மரணப்படுக்கையிலும் விகடம் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது நண்பருக்கு. “பயப்படாதீர்கள் பிழைத்து கொள்வீர்கள்” என்றார் நண்பர். இனி மேல் முடியாது என்பது …. Read More
ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன் உண்மையை அறியாமல் அவனை தண்டிக்க விரும்பவில்லை. எனவே அவர் இப்புதிரை தீர்க்கும் பொறுப்பை ஆர்க்கிமிடீஸ் எனும் அக்காலத்தில் சிறந்த கணித மேதையிடம் ஒப்படைத்தார்.
அறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ரத் அலி (ரழி) அவர்கள் தாராளமாய் கேளுங்கள் என்றார். செல்வம், அறிவு இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர். ஹஸ்ரத் அலி …. Read More
மன்னரின் மதி நுட்ப தீர்ப்பு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தாவூத் – அலை – அவர்களின் காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களின் மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்றது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், ‘உன் மகனைத் தான் ஓநாய் கொண்டு சென்றது” என்று கூறினாள். எனவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) …. Read More
அல்லாஹ்வின் உதவி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இஸ்ரவேலர்களில் ஒருவர் மற்றொருவரிடம் தமக்கு ஆயிரம் தங்கக்காசுகள் கடனாகக் கேட்டார். கடன் கேட்கப்பட்டவர் ‘சாட்சிகளை எனக்குக் கொண்டு வா! அவர்களைச் சாட்சியாக வைத்துத் தருகிறேன்’ என்றார். கடன் கேட்டவர் ‘சாட்சிக்கு அல்லாஹ்வே போதுமானவன்!’ என்றார். ‘அப்படியானால் ஒரு பிணையாளியை என்னிடம் கொண்டுவா!’ என்று கடன் கேட்கப்பட்டவர் கூறினார். அதற்குக் கடன் கேட்டவர் ‘பிணை நிற்க அல்லாஹ்வே போதுமானவன்’ என்று கூறினார். கடன் கேட்கப்பட்டவர் ‘நீர் கூறுவது உண்மையே!’ என்று கூறி, …. Read More
இறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர் இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை. மாறாக, (மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே) உங்களை ஒன்றுகூட்டினேன். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது(பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் …. Read More
புத்திசாலி பெர்னாட்ஷா அறிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் முலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க முடியவில்லை.