எருதும் சிங்கமும் Tamil kids stories
பெரிய எருது ஒன்றைக் கொன்று தின்ன ஆசைப்பட்டது சிங்கம், அந்த எருது தன் கூர்மையான கொம்புகளால் குத்தினால் என்ன செய்வது என்று அஞ்சியது.
எருது ஏமாந்திருக்கும் போது அதன் பின்னால் பாய்ந்து ஒரே அடியில் அதைக் கொல்ல வேண்டும். எருதை விருந்திற்கு அழைப்போம். தக்க சமயம் பார்த்து அதைக் கொல்வோம் என்று நினைத்தது சிங்கம்.
எருதைச் சந்தித்த அது, ‘நண்பா! என் வீட்டில் உனக்காக விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். நீ கண்டிப்பாக விருந்திற்கு வர வேண்டும்’ என்று அழைத்தது.
அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட எருது சிங்கத்துடன் சென்றது. எப்பொழுதும் கவனமுடன் இருக்கும் எருது தன் கண்களால் சிங்கத்தைப் பார்த்தபடியே வீட்டிற்குள் நோட் டம் விட்டது. அங்கே விருந்து நடப்பதற்கான எந்த முன்னேற்பாடும் இல்லை என்பதை அறிந்தது. சிங்கத் தின் வஞ்சக எண்ணம் அதற்குப் புரிந்தது.
‘சிங்கமே! இங்கே ஒன்றும் விருந்து நடப்பதாகத் தெரியவில்லையே. இருக்கின்ற சூழலைப் பார்த்தால் நீ என்னை விருந்தாக உண்ணத் திட்டம் போட்டிருக்கிறாய் என்று தெரிகிறது. இதற்கு எல்லாம் நான் ஏமாற மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடியது எருது.