உங்களால் முடியுமா?

உங்களால் முடியுமா?

முட்டை வியாபாரி ஒருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளிடம் 90 முட்டைகளை மூத்தவளிடம் 10, இரண்டாம் மகளிடம் 30, கடைசி மகளிடம் 50வும் வழங்கி சந்தையில் விற்று வரும் படி கூறினார்.ஆனால் அவர் பிள்ளைகளுக்கு சில நிபந்தனைகளை விதித்தார்.

  1. அனைவரும் ஒரே விலையில் முட்டைகளை விற்கவேண்டும்.
  2. மூவரும் முட்டைகளை விற்று பெறும் மொத்த பணம் சமமாக இருக்க வேண்டும்.மூவரும் தந்தையின் நிபந்தனையை ஏற்று அதன் படி முட்டைகளை விற்று பணம் கொண்டு வந்தனர்……. எவ்வாறு?

உங்களால் முடியுமா? Tamil puzzle answer

சந்தையில் கேள்வி குறைவாக இருந்ததால் 7 முட்டைகள் 3 ரூபா வீதம் விற்கப்பட்டன.

மூத்தவள் 7 முட்டைகளை விற்று 3 ரூபாவும்

இரண்டாவது மகள் 28 முட்டைகளை விற்று 12 ரூபாவும்

மூன்றாவது மகள் 49 முட்டைகளை விற்று 21 ரூபாவும் பெறுகின்றனர்.

எஞ்சிய முட்டைகளுக்கு கேள்வி அதிகரிக்க ஒரு முட்டையை 9 ரூபா வீதம் விற்கின்றனர்.

மூத்தவள் 3 முட்டைகளை விற்று 27 ரூபாவும்

இரண்டாவது மகள் 2 முட்டைகளை விற்று 18  ரூபாவும்

மூன்றாவது மகள் 1 முட்டையை விற்று 9 ரூபாவும் பெறுகின்றனர்.

வீடு செல்லும் போது

மூத்தவள்     3+27 = 30/=

இரண்டாவது மகள்  12+18 =30/=

மூன்றாவது மகள்   21+9 = 30/=

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *