ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர்

ஊழியர் சம்பள அதிகரிப்பு புதிர்

ஒரு கூட்டுத்தாபனத்தில் மூவர் நேர்முகப் பரீட்சையில் சித்தி அடைந்தனர். அவர்களுக்கு ஆரம்ப வருடாந்த ஊழியமாக 100,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களது சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலதிபர் இரு கருத்துகளை முன்வைத்து ஒன்றை தெரிவு செய்யும்படி கூறினார்.

  • முதலாவது ஒவ்வொரு ஆண்டும் 1500 ரூபாய் அதிகரிப்பு,
  • இரண்டாவது அரையாண்டுக்கு ஒரு முறை 500 ரூபாய் அதிகரிப்பு.

salary-puzzle-tamil

முதலிருவரும் முதல் கருத்தை விரும்பி ஏற்றனர். சற்று யோசித்த மூன்றாமவன் இரண்டாம் தெரிவை ஏற்றான்.

மூன்றாம் நபரின் திறமையை பாராட்டிய தொழிலதிபர் அவரை முதலிருவருக்கும் அதிகாரியாக நியமித்தார்.

தொழிலதிபரின்  இந்த தீர்மானத்திற்கான காரணம் என்ன?

குறைந்த ஊழிய அதிகரிப்பால் கூட்டுத்தாபனத்திற்கு இலாபம் ஏற்படும் என்பது தவறான விடை

சரியான விடை

வருடம் 1500 ரூபாய் வருடாந்த அதிகரிப்பு   500 ரூபாய் அரை வருட அதிகரிப்பு
முதலாம் வருடம்  100000  50000+50500=100500
இரண்டாம் வருடம்  101500  51000+51500=102500
மூன்றாம் வருடம்  103000  52000+52500=104500
 நான்காம் வருடம்  104500  53000+53500=106500

எனவே வருடாந்த அதிகரிப்பை விட அரை வருட அதிகரிப்பு ஊழியருக்கு இலாபகரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *