பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன.

ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகி றது. நாம் அதனிடமிருந்து தப்பி க்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும்’ என்று உணர்ச்சியுடன் பேசியது.

கிழ எலி ஒன்று எழுந்து, ‘நீ சொல்வது உண்மைதான். நாம் எல்லோரும் பூனைக்கு அஞ்சி அஞ்சித்தான் வாழ்கிறோம். அதனிடமிருந்து தப்பிக்க வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே, என்ன செய்வது?’ என்றது.

அங்கிருந்த சுண்டெலி ஒன்று எழுந்தது. ‘நாம் எதிர்பாராத நேரத்தில் பூனை நம் மீது பாய்ந்து பிடித்துக் கொள்கிறது. நம்மால் தப்பிக்க முடியவில்லை. பூனை வருவது நமக்கு முன்னரே தெரிந்தால் நாம் அதனிடமிருந்து தப்பிக்க முடியும்.

நாம் எப்படியாவது முயன்று பூனையின் கழுத்தில் ஒரு மணியைக் கட்டிவிட்டால் போதும். அது வரும் போதெல்லாம் மணி ஓசை நமக்குக் கேட்கும். நாம் வளைக்குள் பாதுகாப்பாகப் பதுங்கிக்கொள்ளலாம். பூனையால் நம்மைப் பிடிக்கவே முடியாது’ என்றது.

‘ஆ! அருமையான திட்டம். இனி அந்தப் பூனையால் நம்மைப் பிடித்துத் தின்ன முடியாது’ என்று பல எலிகள் அந்தச் சுண்டெலியைப் பாராட்டின.

‘திட்டம் நல்ல திட்டம்தான். அதை நிறைவேற்றுவதில் ஒரு சிக்கல் உள்ளதே’ என்றது கிழ எலி ஒன்று.

‘பூனையின் கழுத்தில் மணி கட்டப் போவது யார்? நீங்களா அல்லது திட்டத்தைச் சொன்ன சுண்டெலியா? நம்மால் பூனையின் அருகே சென்று உயிருடன் திரும்ப முடியுமா? இயலாத செயலுக்கு ஏன் இப்படி ஆரவாரம் செய்கிaர்கள்?’ என்றது அது.

அப்பொழுதுதான் மற்ற எலிகளுக்கும் ‘பூனையின் கழுத்தில் மணி கட்டுவது இயலாத செயல்’ என்பது புரிந்தது.

எல்லா எலிகளும் தலையை கவிழ்த்தன. ஆனால் இரு இளம் எலிகள் இரு வேறு யோசனைகள் கூறி பூனையின் கழுத்தில் மணியைக் கட்டின. அவற்றைக் கேட்டு வியந்த மற்றைய எலிகள் இவ்விரு எலிகளின் புத்திக் கூர்மையை மெச்சின. அடுத்தநாள் பூனை வரும்போது மணியோசை கேட்டது. எலிகள் ஓடி ஒளிந்தன. பூனைக்கு ஏமாற்றம். அதற்குப் பிறகு, பூனையால் அந்த வீட்டில் ஓர் எலியைக்கூட பிடிக்க முடியவில்லை. இவ்விரு யோசனைகளில் உங்களால் ஒன்றாவது கூற முடியுமா?

விடை பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்

முதல் புத்திசாலி எலி கூறியது

‘நான் இரவு நேரத்தில் பக்கத்து மருந்துக்கடையிலிருந்து தூக்க மாத்திரைகளை எடுத்து வந்தேன். பூனை குடிக்கும் பாலில் அவற்றைப் போட்டேன். அது, அயர்ந்து தூங்கும்போது மணியைக் கட்டினேன்’ என்று சொன்னது.

இரண்டாம் எலியோ

‘பூனையின் கழுத்தில் மணி கட்ட முடியாது . ஆனால், பூனை குட்டி போட்டிருக்கிறது. அந்தக் குட்டி இன்னும் கண் விழிக்கவில்லை. அதன் கழுத்தில் மணியைக் கட்டலாம். அதன்படியே, தாய்ப் பூனை வேட்டையாடச் சென்றிருக்கும் போது, எலிகள் ஒன்றுசேர்ந்து கண் விழிக்காத குட்டியின் கழுத்தில், சிறியதொரு மணியைக் கட்டின. பின் பூனை குட்டியோடு வரும்போது மணிச் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தன. அத்தோடு அக் குட்டிப் பூனை பெரிதானாலும் மணி அதன் கழுத்திலேயே தொடர்ந்தும் இருக்கும்.

9 Replies to “பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *