TAMIL MORAL STORIES
STORIES FOR KIDS
TAMIL FUNNY, INTERESTING, BRAVE STORIES
7032. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘நான் உறங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) ஒரு பால்கோப்பை என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் அதிலிருந்த பாலை அருந்தினேன். பின்னர் அதன் மீதியை கத்தாபின் புதல்வர் உமருக்குக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! பாலுக்கு என்ன விளக்கம் கண்டீர்கள்?’ என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள். 52 Volume :7 Book :91
7028. இப்னு உமர்(ரலி) அவர்களின் தோழர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கனவு கண்டால் அதை நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அல்லாஹ் நாடிய (விளக்கத்)தைக் (கனவுக்குக்) கூறுவார்கள். நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னல் இளம் வயது வாலிபனாய் இருந்த சமயம் பள்ளிவாசலே என் வீடாய் இருந்தது. (அங்கு தான் உறங்குவேன்.) அப்போது நான் மனத்துக்குள்ளே ‘உனக்கு ஏதேனும் நன்மை நடப்பதாயிருந்தால் இவர்களைப் போன்று நீயும் (கனவு) கண்டிருப்பாய்’ என்று சொல்லிக் கொள்வதுண்டு. …. Read More
பெரியார் ஒருவர் கூறுவதாவது நான் ஒரு தடவை கடை வீதிக்கு சென்றபோது என்னுடைய கறுப்பு நிற ஹபஷி அடிமை பெண்ணையும் அழைத்துச் சென்றேன். அங்கு ஓர் இட்த்தில் அவளை உட்கார வைத்துவிட்டு திரும்பி வந்து அழைத்துச் செல்வதாக கூறிச் சென்றேன். நான் திரும்பி வந்து பார்த்த போது அங்கு அவளை காணவில்லை.