ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்
ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் அரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன் உண்மையை அறியாமல் அவனை தண்டிக்க விரும்பவில்லை. எனவே அவர் இப்புதிரை தீர்க்கும் பொறுப்பை ஆர்க்கிமிடீஸ் எனும் அக்காலத்தில் சிறந்த கணித மேதையிடம் ஒப்படைத்தார்.
பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்
பூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர் ஒரு வீட்டில் நிறைய எலிகள் இருந்தன. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து கூட்டம் போட்டன. ஓர் எலி எழுந்து, ‘இங்குள்ள பூனையின் கொடுமை தாங்க முடியவில்லை; நாள்தோறும் நான்கைந்து எலிகளைக் கொன்று தின்கின்றது. நம் இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகி றது. நாம் அதனிடமிருந்து தப்பி க்க ஏதேனும் வழி கண்டாக வேண்டும்’ என்று உணர்ச்சியுடன் பேசியது. கிழ எலி ஒன்று எழுந்து, ‘நீ …. Read More
முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா?
முல்லா தீர்த்த புதிர் உங்களால் தீர்க்க முடியுமா? முல்லா நல்ல அறிவாளி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் தமது அறிவாற்றலினாலேயே அந்த ஆபத்திலிருந்து தப்பி விடுவார் என்றும் ஊரில் உள்ளவர்களில் பலர் கூறுவது மன்னரின் காதில் விழுந்தது. அவரது அறிவாற்றலைப் பரிசோதிப்பதற்காக மன்னர் ஒரு நாள் முல்லாவை தமது சபைக்கு வரவழைத்தார். முல்லா வந்து வணங்கி நின்றார். முல்லா உனது அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன், நீங்கள் ஏதேனும் ஒன்றைக் கூறும், நீர் சொல்வது …. Read More
இது எப்படி சாத்தியம்
இது எப்படி சாத்தியம் ஓர் கழுதை தினமும் 40 கி.மீ. தூரம் நடக்கும். ஆனால் அதன் இரு கால்கள் 40 கி.மீ. தூரமும் மற்ற இரு கால்கள் 41 கி.மீ. தூரமும் நடக்கின்றன. கழுதை சாதரணமாது, அதன் கால்களுக்கு இடைப்பட்ட தூரம் 1கி.மீ. அன்று ஆயின் இது எப்படி சாத்தியம் ஆகலாம்.?
உங்களால் முடியுமா?
உங்களால் முடியுமா? முட்டை வியாபாரி ஒருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளிடம் 90 முட்டைகளை மூத்தவளிடம் 10, இரண்டாம் மகளிடம் 30, கடைசி மகளிடம் 50வும் வழங்கி சந்தையில் விற்று வரும் படி கூறினார்.ஆனால் அவர் பிள்ளைகளுக்கு சில நிபந்தனைகளை விதித்தார். அனைவரும் ஒரே விலையில் முட்டைகளை விற்கவேண்டும். மூவரும் முட்டைகளை விற்று பெறும் மொத்த பணம் சமமாக இருக்க வேண்டும்.மூவரும் தந்தையின் நிபந்தனையை ஏற்று அதன் படி முட்டைகளை விற்று பணம் கொண்டு வந்தனர்……. எவ்வாறு? …. Read More