புத்திசாலி பெர்னாட்ஷா
புத்திசாலி பெர்னாட்ஷா அறிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் முலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க முடியவில்லை.