ஒன்று பட்டாலே வாழ்வு
தன் மகன்கள் நால்வரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தார் தந்தை. ஒற்றுமையாக இருங்கள் என்று அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்களோ அவர் பேச்சைக் கேட்கவில்லை. என்ன செய்வது என்று சிந்திதார் அவர். நல்ல வழி ஒன்று தோன்றியது. குச்சிகள் பலவற்றை ஒன்று சேர்த்து ஒரே கட்டாக கட்டினார்.
அபூநவாஸின் கடைசி நகைச்சுவை
அபூநவாஸின் கடைசி நகைச்சுவை அப்பாசிய கலீபா ஹாருன் அல் ரஷீதின் அரசவையில் நகைச்சுவை புலவராயிருந்தவர் அபூநவாஸ். எல்லோரையும் சிரிக்க வைத்த அபூநவாசை பிணி சூழ்ந்து கொண்டது. மரணப்படுக்கையில் கிடந்தார். மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டு விட்டார்கள். அப்போது அவரை நண்பர் ஒருவர் பார்க்க வந்தார். அபூ நவாஸின் நண்பரல்லவா, அவரிடமும் நகைச்சுவை இல்லாமலா போகும். மரணப்படுக்கையிலும் விகடம் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது நண்பருக்கு. “பயப்படாதீர்கள் பிழைத்து கொள்வீர்கள்” என்றார் நண்பர். இனி மேல் முடியாது என்பது …. Read More
அறிஞரின் அபூர்வ பதில்கள்
அறிஞரின் அபூர்வ பதில்கள் புகழ் பெற்ற அறிஞரான ஹஸ்ரத் அலி (ரழி) அவர்களைக் காண ஒரு நாள் பத்து அறிஞர்கள் வந்தார்கள். அவர்கள் ஹஸ்ரத் அலியிடம் “நாங்கள் உங்களிடம் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்க போகிறோம், எங்கள் பத்து பேருக்கும் தனித் தனியே உங்களால் பதில் தர முடியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ரத் அலி (ரழி) அவர்கள் தாராளமாய் கேளுங்கள் என்றார். செல்வம், அறிவு இரண்டில் எது சிறந்தது? ஏன்? இதுதான் கேள்வி என்றார் அறிஞர்களில் ஒருவர். ஹஸ்ரத் அலி …. Read More
புத்திசாலி பெர்னாட்ஷா
புத்திசாலி பெர்னாட்ஷா அறிஞர் பெர்னாட்ஷா சிறுவயதில் வறுமையில் வாடினார். அவருடைய தந்தை மகாகுடிகாரர். குடும்ப பொறுப்பு இல்லாதவர். பெர்னாட்ஷாவின் தாய் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் முலம் கிடைக்கும் குறைந்த வருமானத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தார். அதனால், மகனுக்கு நல்ல கல்வியை அவரால் கொடுக்க முடியவில்லை.
சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)
சாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story) முன்னொரு காலத்தில் அரேபியர் ஒருவருக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது மரணத்தருவாயில் தன்னுடைய அனந்தரச் சொத்தில் முதல் இரு புதல்வருக்குமே பங்கு உண்டு, கடைசி மகனுக்கு பங்கில்லை என எழுதிவிட்டு இறந்துவிட்டார். இவ் உயிலுக்கு விளக்கம் கேட்க மூவரும் இஸ்லாமிய நீதிபதியான காதியை நாடி பிரயாணம் செய்தனர். சாமார்த்தியசாலிகளான மூவரும் போகும் வழியில் ஏதோ மிருகம் புற்களை மேய்ந்துவிட்டுச் சென்றிருப்பதை அவதானித்தனர். அப்போது அவ்வழியே வந்த …. Read More
புத்திசாலி பீர்பால்
புத்திசாலி பீர்பால் இந்திய பேரரசர் அக்பர், தன் அரசவை ஊழியர்களிடம் பலவிதமான கேள்விகளையும், புதிர்களையும் அடிக்கடி கேட்பார். அவர்களின் அறிவு மற்றும் சமயோசித புத்தியைச் சோதிக்கவே அவர் இவ்வாறு செய்வார். ஒரு முறை தன் அரசவை ஊழியர்களிடம் விசித்திரமான ஒரு கேள்வியைக் கேட்டார். “இந் நகரத்தில் எத்தனை காக்கைகள் இருக்கின்றன?” என்பதே கேள்வி. அவர் தன் ஊழியர், எல்லாரையும் கேட்டார். ஒருவர் பின் ஒருவராக எழுந்து நின்று, மெளனமாக தங்கள் தலையை ஆட்டினர். யாராலும் பேரரசரின் …. Read More
இமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி
இமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி
நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே
நன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அந்த வானவர் தொழுநோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம்,நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் என்னை அருவருப்பாகக் கருதக் …. Read More
பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக
பூனைக் குட்டிக்கு இரங்கியதற்காக இறை நேசர் ஷிப்லி (ரஹ்) அவர்கள் மரணித்ததும் அவரின் சீடர்களில் ஒருவர் அன்னாரை கனவில் கண்டார். சுவர்க்கலோகத்தில் அவர் மகிழ்ச்சியாக அழகான ஆடை அலங்காரத்துடன் காணப்பட்டார். உங்கள் வெற்றிக்கு காரணமென்ன? என சீடர் அவரிடம் வினவவினார். அதற்கு அவர் “எனது வணக்கத்தின் காரணமாக எனக்கு இந்த உயர் பதவியை அளித்து அல்லாஹ் என்னை மன்னித்தான் என நினைத்தேன்.ஆனால் இதற்குக் கரரணம் எனது ஒரு சிரிய நற்செயலே” எனஅவர் விளக்கமளித்தார்.
அறவீனமா ஞானமா?
அறவீனமா ஞானமா? ஒரு நாள் நபியவர்கள் தங்களது தோழர்களுடன் ஒரு ஜனாஸா ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது ஸஃது இப்னு ஸஃனா என்ற ஒரு யஹுதி வந்து நபியவர்களின் மேலாடை, சட்டையை இழுத்துத் தன்னுடைய கடனை அடைக்கும்படி கோப ஆவேசத்தில் முஹம்மதே! என்னுடைய உரிமையை நிறைவேற்றிடும் எனக் கேட்டான். உமர் (ரழி) அவர்கள் கோபம் கொண்டு, யஹுதியைப் பார்த்தார்கள், அல்லாஹ்வின் எதிரியே! நான் செவியுறும் இவ் வார்த்தையைக் கேட்டு நான் கண்டவற்றை செய்கிறாயா? இந்நபியை உண்மையைக் கொண்டு …. Read More